ADDED : செப் 20, 2024 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள கோழிப் பண்ணையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 1500 கோழிகள் எரிந்து சாம்பலானது.
விருப்பாச்சியை சேர்ந்தவர் ஹர்சவரதன். இவர் ஏழு செட் அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் உள்ள ஒரு செட்டில் 1500 க்கு மேற்பட்ட பிராய்லர் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மின் கசிவு காரணமாக செட் தீப்பிடித்து எரிந்தது. இதில் 1500 கோழிகள் கருகி பலியாயின.
உபகரணங்கள் எரிந்து சாம்பலானது. வேலையாட்கள் இல்லாதால் தப்பினர்.