/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் ஒரே நாளில் 163.90 மி.மீ., மழை
/
மாவட்டத்தில் ஒரே நாளில் 163.90 மி.மீ., மழை
ADDED : அக் 12, 2024 05:01 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 163.90 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக அணைகள்,குளங்களின் நிர்மட்டம் படிப்படியாக மேல் உயரத்தொடங்கி உள்ளது.
திண்டுக்கல்லில் மே மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்த நிலையில் சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பகல்,இரவு என அவ்வப்போது மழை பெய்கிறது.
இடைவிடாது பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதி வீடுகளில் கழிவுநீர்,மழைநீருடன் கலந்து வீட்டிற்குள் புகுகிறது.
மழையால் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 163.90 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், நீர்நிலைகள், அணைகளில் நீர்மட்டம் உயரத்தொடங்கி உள்ளது.
பழநி : பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாலாறு பொருந்தலாறு அணையில் 48.92 அடி (65 அடி) நீர் உள்ளது.இங்கு வினாடிக்கு 75 கன அடி நீர் வரத்து உள்ளது. வரதமாநதி அணை மூன்று மாதங்களுக்கு மேலாக நிரம்பி வழியும் நிலையில் இங்கு வினாடிக்கு 47 கனஅடி நீர்வரத்து உள்ளது.
குதிரையாறு அணையில் 67.3 அடி (80 அடி) நீர் உள்ளது.இங்கு52 கன அடி நீர்வரத்து உள்ளது.
பழநி பாலசமுத்திரம் கிழக்குத் தெரு பள்ளிவாசல் வீதியில் வசித்து வருபவர் முகமது கனி 62. இவரது வீடு நேற்று முன்தினம் இரவு மழையின் காரணமாக கூரை, சுவர்கள் இடிந்து விழுந்தது. வீட்டில் நிறுத்தியிருந்த மூன்று டூவீலர்கள் உட்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. இதில் முகமது கனி காயமடைந்தார்.