/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருக்கலைப்பு முயற்சியில் 17 வயது சிறுமி மரணம்
/
கருக்கலைப்பு முயற்சியில் 17 வயது சிறுமி மரணம்
ADDED : அக் 29, 2025 02:11 AM
திண்டுக்கல்: தகாத உறவால் கர்ப்பமடைந்த 17 வயது சிறுமி, கருவை கலைக்கும் முயற்சியில் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்த 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தார். இதை பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் வைத்திருந்தார். ஏழு மாத கர்ப்பத்தில், வேறு வழியின்றி பெற்றோரிடம் தெரிவித்தார்.
நாட்டு மருந்து மூலம் சிறுமிக்கு கருவை கலைக்க முயற்சி செய்துள்ளனர். இதில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், அக்., 24ல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று இறந்தார்.
அவரது கர்ப்பத்திற்கு காரணமான நபர், கருவை கலைக்க மருந்து கொடுத்த நபர் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

