ADDED : நவ 04, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பு ஊராட்சி பழையபட்டியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி பொன்னாத்தாள், பசு மாடு நனையாமல் இருக்க அதனை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது இருவரையும் மின்னல் தாக்கியது.
இதில் பசு மாடு இறந்தது. பலத்த காயமடைந்த பொன்னம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேடசந்துார் வெல்லம்பட்டி ஊராட்சி கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிமுத்து 45. இவர் வளர்த்து வந்த சினை பசு மாடு ஒன்று மழையின் போது திடீரென மின்னல் தாக்கி இறந்தது. வி.ஏ.ஓ., தகவலின்படி வேடசந்துார் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.