/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
/
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை
ADDED : அக் 16, 2024 02:13 AM
திண்டுக்கல்:விளாம்பட்டியில் வழக்கிலிருந்து விடுவிக்க கூலித்தொழிலாளியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விளாம்பட்டி கூலித்தொழிலாளி முத்துமணி 35. அக்டோபர் 2012 ல் இவருக்கும் பக்கத்து வீட்டு காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கினர். இருதரப்பினரும் விளாம்பட்டி போலீசில் புகாரளிக்க எஸ்.ஐ.,வெள்ளைச்சாமி 63, விசாரித்தார். முத்துமணியை வழக்கிலிருந்து விடுவிக்க எஸ்.ஐ., ரூ.4 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதை விரும்பாத அவர் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளிக்க போலீசார் எஸ்.ஐ.,வெள்ளைச்சாமியை கைது செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன்வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் எஸ்.ஐ.,வெள்ளைச்சாமிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வழக்கறிஞரர் அனுராதா ஆஜரானார்.