/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேன்கள் நேருக்கு நேர் மோதல் 20 பேர் காயம்
/
வேன்கள் நேருக்கு நேர் மோதல் 20 பேர் காயம்
ADDED : செப் 01, 2025 02:32 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பைபாசில் கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகள் வேனும் பழநி சென்ற பக்தர்கள் வேனும் நேருக்கு நேர் மோதிய தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
கரூரில் கங்கா தேவி என்பவர் தனது தோழிகளுடன் வேனில் கொடைக்கானல் சென்றனர். நேற்று காலை வத்தலக்குண்டு பைபாஸ் பட்டிவீரன்பட்டி பிரிவில் வந்தபோது, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து பழநி நோக்கி சென்ற பக்தர்கள் வேன் நேருக்கு நேர் மோதியது.இரு வேன்களில் இருந்த கங்காதேவி 49, பாமா 48, நித்திய பிரியா 41, லதா 50, அனுசுயா 20, லட்சுமி 47, அனிதா 23 மற்றும் வேன் டிரைவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.