/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்
/
20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்
ADDED : செப் 28, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாவட்டத்தில் நேற்று நடந்த சோதனையில் 20 கடைகளுக்கு சீல் வைத்து 150 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.6 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல், புறநகர்,சாணார்பட்டி,ஆத்துார், ஒட்டன்சத்திரம்,தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம்,ஜாபர் சாதிக்,ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.