UPDATED : நவ 10, 2026 10:03 AM
ADDED : நவ 10, 2026 09:58 AM
திண்டுக்கல்: மாவட்டத்தில் தீபாவளி அன்று விதிமீறி பட்டாசுகள் வெடித்ததாக 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் நலன் கருதி தீபாவளி அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம். மேலும் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து தமிழக அரசு தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டுதல் வழங்கியதுடன், நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்ததாக திண்டுக்கல் டவுன் சப் டிவிசன், ரூரல், பழநி, கொடைக்கானல் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
