/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலையில் வேன் கவிழ்ந்து 22 மாணவர்கள் காயம்
/
சிறுமலையில் வேன் கவிழ்ந்து 22 மாணவர்கள் காயம்
ADDED : ஏப் 17, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:சிறுமலைக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய காந்திகிராம பல்கலை மாணவர்கள் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் காயமடைந்தனர்.
சின்னாளப்பட்டி காந்திகிராம பல்கலை கணினித் துறை மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் சிறுமலைக்கு 2 வேன்களில் கல்வி சுற்றுலா சென்றனர். திரும்பி வரும் போது 3 வது கொண்டை ஊசி வளைவு அருகே ஒரு வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் பயணித்த 22 மாணவர்கள், ஓட்டுநர் என 23 பேர் காயமடைந்தனர். அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.