/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
250 கிலோ புகையிலை:ரூ.2.50 லட்சம் அபராதம்
/
250 கிலோ புகையிலை:ரூ.2.50 லட்சம் அபராதம்
ADDED : பிப் 09, 2024 05:04 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் பதுக்கிய 250 கிலோ தடை புகையிலையை பறிமுதல் செய்து ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் நகர்,புறநகர் பகுதிகளில் தடை புகையிலை பொருட்கள் அதிகளவில் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
கலெக்டர் பூங்கொடி உத்தரவில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி,பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம்,சரண்யா,ஜோதிமணி,ஜாபர் சாதிக் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர்,புறநகர்,ஆத்துார்,நிலக்கோட்டை,செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது செம்பட்டி,ஆத்துார்,திண்டுக்கல் நகர் பகுதியில் 250 கிலோ தடைபுகையிலை பதுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ரூ.2.50 லட்சம் அபராதமும்,8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக 4 பேர் மீது குற்ற வழக்குகளும் பதியப்பட்டது.
தென்னம்பட்டி வடக்கு பகுதியில் இருக்கும் பாலமுருகன் டீக்கடையில் வடமதுரை எஸ்.ஐ., சித்திக், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வசந்தகுமார், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாலரை கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் உரிமையாளருக்கு ரூ. 25000 அபதாரம் விதித்தனர்.
செம்பட்டியில் சரவணன் என்பவர் கடையில் நேற்று நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா ஆய்வு செய்தார்.
அப்போது 200 கிலோ குட்கா பிடிபட்டது. பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.
இதே பகுதியில் 7 பாக்கெட் குட்கா வைத்திருந்த அருள்செல்வனுக்கு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.

