/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொந்தரவுவாலிபருக்கு 27 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு தொந்தரவுவாலிபருக்கு 27 ஆண்டு சிறை
ADDED : மே 17, 2025 01:52 AM
திண்டுக்கல: சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூரை சேர்ந்தவர் அஜித்குமார் 29. மதுரை தனியார் மில்லில் பணியாற்றினார். அதே மில்லில் ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்த சிறுமி வேலை செய்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை காட்டி பாலியலில் ஈடுபட்டுள்ளார்.ரெட்டியார்சத்திரம் போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அஜித்குமாருக்கு 27 ஆண்டு சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.