sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேலைகேட்டு பெண் கதறல், ஏலச்சீட்டு நடத்தி மோசடி மனுக்கள் வாயிலாக குறைதீர் கூட்டத்தில் 276 பேர் முறையீடு

/

வேலைகேட்டு பெண் கதறல், ஏலச்சீட்டு நடத்தி மோசடி மனுக்கள் வாயிலாக குறைதீர் கூட்டத்தில் 276 பேர் முறையீடு

வேலைகேட்டு பெண் கதறல், ஏலச்சீட்டு நடத்தி மோசடி மனுக்கள் வாயிலாக குறைதீர் கூட்டத்தில் 276 பேர் முறையீடு

வேலைகேட்டு பெண் கதறல், ஏலச்சீட்டு நடத்தி மோசடி மனுக்கள் வாயிலாக குறைதீர் கூட்டத்தில் 276 பேர் முறையீடு


ADDED : டிச 03, 2024 07:08 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: வேலைகேட்டு பெண் கதறல்,ஏலச்சீட்டு நடத்தி மோசடி என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனுக்கள் வாயிலாக குறைதீர் கூட்டத்தில் 276 பேர் கலெக்டரிடம் முறையிட்டனர்.

கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 276 மனுக்கள் பெறப்பட்டதில் மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் கடனுதவி, மின்சாரம் தாக்கி இறந்த 3 பேரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி என ரூ.7.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி கலந்துகொண்டனர்.

நத்தத்தை சேர்ந்த ரேணுகாதேவி கைக்குழந்தையுடன் அழுதபடியே அளித்த மனுவில் 5 வயதிலிருந்தே ஜல்லிகட்டு காளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது திருமணமாகி 3 வயது, ஆறு மாதம் என இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் சிவா விபத்தால் கால் நரம்பு செயல் இழந்து நடக்க முடியாமல் உள்ளார்.

குழந்தைகளை வளர்க்க முடியாமலும், வளர்த்து வரும் காளைகளுக்கு உணவளிக்க முடியாமலும் உள்ளேன்.கருணை அடிப்படையில் ரேஷன் கடை விற்பனையாளர் பணி வழங்க கேட்டுக்கொண்டார்.

பழநி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் உட்பட சிலர் அளித்த மனுவில்,அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை, நாயகம் ஆகியோர் ஏல சீட்டு நடத்தினர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி சீட்டு பணத்தை வழங்கவில்லை.அதில் 20க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ரூ.50 லட்சத்திற்கு மேல் பணம் வழங்க வேண்டியுள்ளது. சாமிநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தும் வழக்கு பதியவில்லை. எஸ்.பி., யிடம் மனு அளித்த பின் 6 மாதத்திற்கு பின்பு வழக்கு பதிந்தனர்.

அதன் பின்பு 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலையில் அவை தாக்கல் செய்யப்படாததால் இருவரும் ஜாமினில் வெளி வந்தனர்.எலச்சீட்டு நடத்தி வந்த இருவரும் தங்களது சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

அவர்களின் சொத்தை பறிமுதல் செய்து ஏல சீட்டு மூலம் பணத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us