/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி ஆதாருடன் மில்லில் பணி செய்த வங்கதேசத்தினர் 29 பேர் கைது
/
போலி ஆதாருடன் மில்லில் பணி செய்த வங்கதேசத்தினர் 29 பேர் கைது
போலி ஆதாருடன் மில்லில் பணி செய்த வங்கதேசத்தினர் 29 பேர் கைது
போலி ஆதாருடன் மில்லில் பணி செய்த வங்கதேசத்தினர் 29 பேர் கைது
ADDED : மே 25, 2025 02:00 AM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் ஆடைகள் தயாரிக்கும் மில்லில் போலி ஆதார் அட்டை கொடுத்து வேலை செய்து வந்த வங்கதேசத்தினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே வாகரையில் தனியாருக்கு சொந்தமான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் மில் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாக பனியன்கள் உள்ளிட்ட உள்ளாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதனிடையே இங்கு வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் பணிபுரிவோர் அடையாள அட்டைகளை சோதித்தனர். இதில் வங்கதேசத்தை சேர்ந்த ஆண்கள் 29 பேர் , மேற்கு வங்கமாநில முகவரியில் ஆதார் அட்டை வைத்திருந்தனர். அவற்றை சோதித்ததில் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இவர்களை போலீசார் கைது செய்து ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். இவர்கள் மீது இந்திய நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது, விசா இன்றி தங்கி இருந்தது, போலியாக ஆதார் அட்டை தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.