ADDED : ஜன 31, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்; நத்தம் என்.பி.ஆர்., கலை,அறிவியல் கல்லுாரியின் அனைத்து வணிகவியல் துறைகளின் சார்பாக கல்லுாரி இடையே கம்கான்ப் 2கே25 போட்டிகள் நடந்தது.
கல்லுாரி முதல்வர் தபசுக்கண்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் சுதா, வணிகவியல் துறை தலைவர் ஜிம் லிண்டா, சாந்தி முன்னிலை வகித்தனர். 10 வகையான போட்டிகள் நடந்தது.
18 கல்லுரிகளிலிருந்து 390 மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. திண்டுக்கல் பார்வதிஸ் கலை அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.