தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி


UPDATED : நவ 17, 2026 09:26 PM

ADDED : நவ 17, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 09:26 PM ADDED : நவ 17, 2026 09:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.

ரெட்டியார்சத்திரம் அடுத்த எஸ்.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மகன் நிஷ்வந்த் 13. அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் மகன் தருண் 8, மாணிக்கம் மகன் சபரி 9. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தனர்.

மூவரும் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. மதியம் ஊரிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கன்னிமானுாத்து குளத்தில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றனர். முதலில் நிஷ்வந்த் அவரை தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக குளத்தில் இறங்கினர். சேற்றில் நிஷ்வந்த் கால் சிக்கிக் கொண்டது. வெளிவர முடியாமல் தவித்தார். அவரை மீட்கும் முயற்சியில் இறங்கிய மற்ற இருவரும் அடுத்தடுத்து சேற்றுக்குள் சிக்கிக் கொண்டதில், மூவரும் தண்ணீரில் மூழ்கினர்.

குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர் குளக்கரையில் சைக்கிள், காலணிகள் கிடப்பதை கண்டு பதற்றம் அடைந்தனர். திண்டுக்கல் தீயணைப்பு மீட்புத் துறைக்கும், ரெட்டியார்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

30 நிமிடம் தேடுதலுக்கு பின் குளத்தில் இருந்து 3 சிறுவர்களின் உடல்களை மீட்டனர். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us