/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்
/
'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்
'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்
'கொடை'யில் 3 மணி நேரம் நெரிசல் : கனமழையால் பரிதவித்த பயணிகள்
ADDED : நவ 03, 2024 03:15 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலுக்குடையே கனமழை கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் ஏராளமான பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். பெருமாள்மலை கொடைக்கானல் நீர்வீழ்ச்சியை கடக்க 2 மணி நேரம் என்ற அளவுக்கு பயணிகளின் வாகனங்கள் வந்தன.
இரண்டு நாட்களாக நீடித்த போக்குவரத்து நெரிசலால் பயணிகள் துயரத்தை சந்தித்தனர். சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்தும் பயனில்லை. இதனால் போக்குவரத்து போலீசாரும் திணறினர். நேற்று நெரிசலில் ஒரு வழியாக கொடைக்கானலில் வந்தடைந்த பயணிகள் ஒரு சில சுற்றுலா தலங்களை பார்வையிட்ட நிலையில் மதியம் 3:00 மணிக்கு துவங்கிய மழை 6:00 மணி வரை வெளுத்துத்து வாங்கியது.
இதனால் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கினர். ஒருபுறம் போக்குவரத்து நெரிசல், மறுபுறம் தொடர்மழை என பயணிகள் அவதிக்குள்ளானர்.