/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிளஸ் 2 தேர்வில் 338 பேர் ஆப்சென்ட்
/
பிளஸ் 2 தேர்வில் 338 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 02, 2024 05:33 AM
திண்டுக்கல் : பிளஸ்2 தேர்வு துவங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 87 மையங்களில் 19,062 பேர் எழுதிய நிலையில், 338 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு 87 மையங்களில் நடந்த நிலையில் மாணவர்கள் 8,760, மாணவிகள் 10,625, தனித்தேர்வர்கள் 186 என 19,571 பேர் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதில் நேற்று நடந்த தமிழ் தேர்வில் மாணவர்கள் 8562, மாணவிகள் 10,500, தனித்தேர்வர்கள் 160 பேர் என 19,222 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 198 ,மாணவிகள் 125 தனித்தேர்வர்கள் 15 என 338 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை கலெக்டர் பூங்கொடி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் ஆய்வு செய்தனர்.
143 பறக்கும் படை உறுப்பினர்கள் 87 மையங்களில் ஆய்வு செய்தனர். தேர்வு முடிந்ததும் போலீசார் உதவியோடு விடைத்தாள்களை கல்வித்துறை அதிகாரிகள் வாகனங்களில் எடுத்து சென்றனர்.

