/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துார் அருகே நாயக்கர்கள் கால 3ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
/
வேடசந்துார் அருகே நாயக்கர்கள் கால 3ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
வேடசந்துார் அருகே நாயக்கர்கள் கால 3ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
வேடசந்துார் அருகே நாயக்கர்கள் கால 3ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 21, 2025 09:02 PM

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே நாயக்கர்கள் கால 3ம் நுாற்றாண்டை சேர்ந்த இரு நடுகல் ரோட்டோரம் வீசப்பட்ட நிலையில் தற்போது புதர் மறைந்து வெளியே தெரிகிறது . இதை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மூன்றாம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் ஆட்சி காலம் நடந்தது. அப்போதுதான் மதுரையை தலைமை இடமாக கொண்டு திருமலை நாயக்கர் பரம்பரையில் நாயக்க மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆங்காங்கே சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் ஜமீன்களாய் நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர். அப்போதைய அரச பரம்பரையை சேர்ந்த இரண்டு நடுகல்கள் வேடசந்துார் கல்வார்பட்டி அருகே ரோட்டோரம் கேட்பாரற்று கிடக்கின்றன. செடிகளுடன் புதர் மண்டி காணப்பட்டதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது செடிகள் காய்ந்த நிலையில் கற்கள் வெளியே தெரிந்தது. கணவன், மனைவி என இருவர் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன . அரச பரம்பரையை சேர்ந்த வீரர்கள் இருவர், அவரவர் மனைவியுடன், ஆடை, ஆபரணங்கள் அணிந்து கொண்டை போட்ட முடி, காதில் நான்கு கற்கள் வைத்த தோடு, வளையல் ,கொலுசு என அன்றைய காலகட்டத்திலேயே நவீன அணிகலன்களை அணிந்துள்ளனர். தலா இரண்டு சிலைகளை உடைய இரு நடு கற்களும் கேட்பாரற்று ரோட்டோரம் வீசப்பட்டுள்ளன. இந்த கற்கள் 15 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் -கரூர் இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது அகற்றப்பட்டு ரோட்டோரம் வீசப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.
கல்வார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் கூறும்போது''ரோட்டோரம் புதரில் வீசப்பட்டு உள்ளதால் நாங்களே இதுவரை பார்க்கவில்லை. இதை தொல்லியல் துறையின் கைப்பற்றி முறையான ஆய்வு நடத்த வேண்டும். வரலாற்று சின்னமாக பாதுகாக்கவும் முயற்சி செய்ய வேண்டும் ''என்றார்.