/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3ம் இடம் பிடித்த பி.வி.பி., பள்ளி
/
3ம் இடம் பிடித்த பி.வி.பி., பள்ளி
ADDED : நவ 13, 2024 04:54 AM

பழநி : பழநி , பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாநில அளவில் நடைபெற்ற கோலுான்றி தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.
பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆறு பேர் மாநில அளவிலான 65 வது குடியரசு தின விழா தடகளப் போட்டிகளில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நவ. 5 முதல் நவ.11 வரை ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தடகளப் போட்டிகளில் பங்கு பெற்றனர். மாநில அளவில் நாலாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கு பெற்றனர். இதில் பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் 11ம் வகுப்பு மாணவர் ஹரிஷ் கோலுான்றி தாண்டுதல் போட்டியில் 3.3 மீட்டர் உயரம் தாண்டி மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். இவரை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.
மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கோலுான்றி தாண்டுதலில் மூன்றாம் பரிசு பெற்ற பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவருடன் பள்ளி நிர்வாகிகள்.

