ADDED : நவ 07, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நத்தம்- வேலம்பட்டியை சேர்ந்தவர் சந்தனக்குமார் 31, ஆடு வியாபாரி. இவர் நேற்று (நவ.,6) இரவு மினிவேனில் 3 பேருடன் திருச்சி- சமயபுரத்தில் ஆடுகளை வாங்கி கொண்டு ஊர் திரும்பினார்.
இன்று (நவ.,7) அதிகாலை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேர்வீடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் வேனில் வந்த சந்தனக்குமார், ராக்காச்சிபுரத்தை சேர்ந்த கார்த்திக் 42, சரவணன் 50, மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமன் 70, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 4 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
