/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்
/
ரயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மார் 27, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் ரயில்களில் திண்டுக்கல் ரயில்வே போலீஸ் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். புருலியாவில் இருந்து நெல்லை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸில் சோதனையிட்டனர். முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று 4 பண்டல்கள் கிடந்தன.
சோதனையிட்டதில் 4 கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.