/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மண்சரிவை கண்காணிக்க 4 பேர் நியமனம்
/
மண்சரிவை கண்காணிக்க 4 பேர் நியமனம்
ADDED : அக் 25, 2024 02:34 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மண்சரிவுகள், பாறை சரிவை கண்காணிக்க வனத்துறையினர் நால்வரை நியமித்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை மேம்படுத்தும் வகையில் வனத்துறை பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இங்கு மழை நேரங்களில் பாறைகள் ரோட்டில் உருண்டு விழுவது,ரோட்டோரங்களில் மண் சரிவுகள் ஏற்படுவது தொடர்கிறது. நேற்று முன்தினம் 7 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை ரோட்டில் விழுந்தது.
பாறை சரிவு, மண் சரிவால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வனத்துறை மூலம் 4 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமலை, பழையூர், தென்மலை, சிறுமலை செல்லும் 18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியிலும் ஆய்வு செய்து வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

