ADDED : அக் 02, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் சென்று வர பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை, ஆண்டு பராமரிப்பு பணிக்காக, அக்., 7 முதல் நவ., 15 வரை 40 நாட்கள் நிறுத்தப்பட உள்ளது.
பழனி முருகன் கோவில் சென்று வர ரோப் கார், விஞ்ச், படிப்பாதை, யானைப்பாதை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடங்களில் கோவில் சென்று வர முடியும். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்டு பராமரிப்பு பணிகள் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், அக்., 7 முதல் நவ., 15 வரை, 40 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில், பழனி கோவில் சென்று வர விஞ்ச், படி பாதை, யானைப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.