/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டாசு வெடித்ததில் 40 பேர் காயம்
/
பட்டாசு வெடித்ததில் 40 பேர் காயம்
ADDED : அக் 22, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் 40 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
தீபாவளியன்று கவனக்குறைவால் பட்டாசு வெடித்ததில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் காயமடைந்தனர். நிலக்கோட்டை, நத்தம், ஆத்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழநி பகுதி 13 அரசு மருத்துவமனைகளில் 28, திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் என 40 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.
இதில் பெரும்பாலனோர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் சிகிச்சை பெறுகின்றனர்.