/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலையில் 3 மாதத்தில் 40 ஆயிரம் மரக்கன்றுகள்
/
சிறுமலையில் 3 மாதத்தில் 40 ஆயிரம் மரக்கன்றுகள்
ADDED : ஜன 20, 2024 05:21 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை வனப்பரப்பை அதிகரிக்க வனத்துறையினர் 3 மாதத்தில் 40 ஆயிரம் மரக்கன்றுகளை சுற்று கிராம மக்களுக்கு வழங்கி பராமரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் சிறுமலையில் காட்டுப்பன்றிகள்,காட்டுமாடுகள் என ஏராளமான வன உயிரினங்கள் வாழ்கின்றன . இங்குள்ள பழையூர்,புதுார்,அகஸ்தியர் புரம் உள்ளிட்ட பல கிராமங்களில் மக்கள் அதிகளவில் குடியிருக்கின்றனர். திண்டுக்கல் நகரில் வெயில் சுட்டெரிக்கும் போதிலும் சிறுமலையில் சீதோஷ்ண நிலையாக இருக்கும் .இதை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் காலை,மாலை நேரங்களில் சிறுமலைக்கு படையெடுக்கின்றனர். சுற்றுலா தலமாக மாறி வரும் சிறுமலையை பாதுகாப்பதில் வனத்துறையும் கவனம் செலுத்துகிறது. திண்டுக்கல் வனத்துறை சார்பில் சிறுமலை வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில் லட்சக்கணக்கில் குமிள்,சில்வர் ஓக் போன்ற வகையிலான மரக்கன்றுகளை வளர்த்து பராமரிக்கின்றனர். அந்த வகையில் சிறுமலை பகுதி மக்களுக்கு நவம்பரிலிருந்து தற்போது வரை 40 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வனத்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். இதுமட்டுமின்றி காட்டின் நடுபகுதியிலும் மரக்கன்றுகளை நடவு செய்து அதையும் அதிகாரிகள் பராமரிக்கின்றனர். இங்கு மேலும் அதிகமான மரக்கன்றுகளை வனப்பகுதிக்குள் நட உள்ளதாக சிறுமலை வனத்துறை ரேஞ்சர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் தெரிவித்தனர்.