/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலைவாய்ப்பு முகாமில் 412 பேருக்கு பணி
/
வேலைவாய்ப்பு முகாமில் 412 பேருக்கு பணி
ADDED : டிச 08, 2024 06:09 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 3 மாற்றுத்திறனாளிகள் உட்பட 412 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆண்டிற்கு இருமுறை மாவட்ட நிர்வாகம் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படுகிறது.
அதன்படி நேற்று திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லுாரியில் நடந்த முகாமிற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். 3 மாற்றுத்திறனாளிகள் உட்பட 412 பேர் பணி நியமனம் பெற்றனர்.
பணி ஆணைகளை கலெக்டர் பூங்கொடி,எம்.பி., சச்சிதானந்தம் வழங்கினர்.
மண்டல இணை இயக்குநர் ஜோதிமணி, திட்ட இயக்குநர்கள் திலகவதி, சதீஸ்பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் பிரபாவதி, வேலைவாய்ப்பு அலுவலர் ராப்சன் டேவிட், மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் நாகநந்தினி கலந்துகொண்டனர்.