/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
களம் கண்ட 442 காளைகள், 400 வீரர்கள்
/
களம் கண்ட 442 காளைகள், 400 வீரர்கள்
ADDED : ஜன 17, 2025 07:06 AM

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்தூர் ஹை கோர்ட் பத்திரகாளியம்மன் கோயில் சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 442 காளைகள் பங்கேற்றன.
பழநி நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துார் பகுதியில் ஹை கோர்ட் பத்திரகாளி அம்மன் கோயில் சார்பில் இங்குள்ள கோட்டை திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். சப் கலெக்டர் கிஷன் குமார் முன்னிலை வகித்தார்.
ஆன்லைனில் 600 காளைகள் பதிவு செய்திருந்த நிலையில் 442 காளைகள் பங்கேற்றன. 400 வீரர்கள் கலந்து கொள்ள எட்டு சுற்றுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்தவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 14 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் குருவித்துறையைச் சேர்ந்த அப்பாவு முதல் இடத்தை பிடித்தார். நெய்க்காரப்பட்டி சேர்ந்த கிரேந்திரன் 9 காளைகளைப் பிடித்து 2வது இடத்தையும் பெற்றார்.
30 வீரர்கள், ஒரு பெண் போலீஸ் உட்பட இரு போலீசாரும் காயமடைத்தனர்.
வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 410 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.