/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இலவச பயிற்சி மையத்தில் படித்த 5 பேர் குரூப் 4 பாஸ்
/
இலவச பயிற்சி மையத்தில் படித்த 5 பேர் குரூப் 4 பாஸ்
இலவச பயிற்சி மையத்தில் படித்த 5 பேர் குரூப் 4 பாஸ்
இலவச பயிற்சி மையத்தில் படித்த 5 பேர் குரூப் 4 பாஸ்
ADDED : நவ 04, 2024 07:08 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த அரசு போட்டி தேர்வு மையத்தில் படித்த 5 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.
ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த இலவச அரசு போட்டித் தேர்வுமையம் உள்ளது. இங்கு படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கிராமப்புற ஏழை மாணவர்களும் அரசு பணிக்கு செல்லும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்குள்ள மாணவர்கள் சில மாதங்களுக்கு முன் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் செந்துறை ஏ.முனியப்பன், ரெட்டியார்சத்திரம் எஸ். அய்யம்பட்டி தேவேந்திரன், அரசப்பபிள்ளைபட்டி பொன்முடி, சிக்கமநாயக்கன்பட்டி வசந்தகுமார், கே.அத்திக்கோம்பை பிரியங்கா ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர். கலந்தாய்வில் பங்கேற்று அரசு பணியில் சேர உள்ளனர். கருப்பாத்தாள் என்பவர் சென்னை ஐகோர்ட் டைப்பிஸ்ட் தேர்வில் தேர்வாகினார். வெற்றி பெற்றவர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் அழைத்து பாராட்டினார். காளாஞ்சிபட்டி முன்னாள் தலைவர் செல்வராஜ் உடன் இருந்தார்.