/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குட்கா விற்ற 599 கடைகளுக்கு சீல்: ரூ.1.52 கோடி அபராதம்
/
குட்கா விற்ற 599 கடைகளுக்கு சீல்: ரூ.1.52 கோடி அபராதம்
குட்கா விற்ற 599 கடைகளுக்கு சீல்: ரூ.1.52 கோடி அபராதம்
குட்கா விற்ற 599 கடைகளுக்கு சீல்: ரூ.1.52 கோடி அபராதம்
ADDED : அக் 20, 2024 04:43 AM

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் 10 மாதத்தில் குட்கா விற்றதாக 599 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.1.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக'' , திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தெரிவித்தார்.
ஓட்டல்களில் தரமான உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா...
அனைத்து வியாபாரிகளிடமும் வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பொருட்களை தரமாக விற்கவேண்டும் என அறிவுறுத்துகிறோம். இதுபற்றி பொதுமக்கள் தரப்பிலிருந்து வரும் புகார்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆய்வுகள் முறையாக நடத்தப்படுகிறதா...
மாவட்டத்தில் பழநி,கொடைக்கானல்,கன்னிவாடி,வத்தலக்குண்டு,வேடசந்துார் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சம்பந்தபட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் தினமும் 20க்கு மேலான கடைகளில் ஆய்வுகள் செய்யப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காலை உணவு திட்டம் தொடர்பாக பள்ளிகள்,அரசு மருத்துவமனைகளிலும் தொடர்ந்து ஆய்வு செய்கிறோம்.
பல உணவு பொருட்களில் காலாவதி தேதி இல்லையே...
திண்டுக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் நிறுவனங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து உற்பத்தி செய்யப்படும் அனைத்திலும் காலாவதி தேதி பதிவிட வேண்டும் என அறிவுறுத்துகிறோம். பொதுமக்களும் அதை ஆய்வு செய்து பொருட்களை வாங்க வேண்டும்.
திறந்தவெளியில் உணவு விற்பனை நடக்கிறதே...
ரோட்டோரத்தில் கடை நடத்தும் வியாபாரிகள் சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை தயாரித்து பொதுமக்களும் விநியோகம் செய்ய வேண்டும் என அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இருந்தபோதிலும் ஒருசிலர் விதிகளை பின்பற்றாமல் உள்ளனர். அவர்களும் பின்பற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கிறோம்.
பிளாஸ்டிக்,குட்கா பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளதே...
மாவட்டம் முழுவதும் வாரத்திற்கு இருமுறை பிளாஸ்டிக்,குட்கா ரெய்டு செல்கிறோம். அந்த வகையில் அதிகமானோர் சிக்குகிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து குற்ற வழக்குகளும் பதியப்பட்டு வருகிறது. இந்தாண்டு 10 மாதத்தில் 1648 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 81 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். ரூ.1.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போல் 3328 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 599 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.1.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரெய்டுககள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தீபாவளி வருவதால் இனிப்பு கடைகள் புதியதாக உருவாகிறதே...
தீபாவளி நேரத்தில் அதிக இனிப்பு மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதால் அதை எவ்வாறு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். என்பது குறித்தெல்லாம் பேக்கரி உரிமையாளர்களிடம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆலோசனை வழங்க உள்ளோம். தரமான பொருட்களை மக்களிடம் விற்க வேண்டும் என்பது குறித்தும் கூறுகிறோம். செயற்கை வண்ணங்கள் உணவு பொருட்களில் அதிகம் சேர்க்க கூடாது. அதை கண்டுபிடித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக இனிப்பு கடைகள் திறப்பவர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும்.
பொதுமக்கள் புகார் தருகிறார்களா...
பொது மக்கள் புகார் கொடுக்கிறார்கள். அதன் எதிரொலியாக உடனே நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் உணவு சம்பந்தபட்ட பிரச்னைகள் குறித்து புகார் கொடுக்கலாம்.
பயோடீசல் உற்பத்தி எப்படி இருக்கிறது...
இந்த ஆண்டிற்கான இலக்கு 125 கிலோ லிட்டராக உள்ளது. தற்போது வரை 68 கிலோ லிட்டர் வரை பயோடீசல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.