/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' விடுதியில் கெட்டுப்போன உணவு சுற்றுலா பயணிகளை தாக்கிய 6 பேர் கைது

ADDED : ஜன 04, 2025 04:25 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் தரமற்ற உணவு குறித்து கேள்வி எழுப்பிய சுற்றுலா  பயணிகள்   மீது  தாக்குதல் நடத்திய  6 பேரை  கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
நாகமலை புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் ஜெஸ்வந்த் குமார் 28,மாலன் 22, திலீப் 29,  திலீப் மனைவி ஜெஸி சிம்ரன் ஆகியோர் கொடைக்கானல் சுற்றுலா வந்தனர். மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் விடுதியில் உணவு சாப்பிட்டனர்.
மீன் , சிக்கன் கெட்டுப் போனதால் ஏன் கெட்டுப்போன உணவுகளை கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
ஆத்திரமடைந்த விடுதியில் உள்ளவர்கள் நால்வரையும் தாக்கி காயத்தை ஏற்படுத்தினர். இது  தொடர்பாக  மூஞ்சிக்கல்லைச் சேர்ந்த முகமது அலி 32, தர்வீஸ் முகைதீன் 35, அர்சத் 27,  அரவிந்த் 27, சர்தார் 34, ஆசிப் ரஹ்மான் 38,  ஆகிய  6 பேரை போலீசார்  கைது செய்தனர்.