ADDED : அக் 19, 2025 03:38 AM
செம்பட்டி: ஆடலுாரில் குட்கா விற்ற கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் 1லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஆத்துார் பகுதியில் மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி உத்தரவில் ஆத்துார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஜாபர் சாதிக், முருகன் தலைமையிலான குழுவினர் தருமத்துப்பட்டி, ஆடலுார், பன்றிமலை, கோனுார், குட்டத்துப்பட்டி, குமார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர்.
ஆடலுாரில் ஏற்கனவே பிடிபட்ட கடையில் 3வது முறையாக குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இப்பகுதியில் 7 கடைகளுக்கு சீல் வைத்தனர். 45 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களிடம் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.