/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கஞ்சா வழக்கில் இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறை
/
கஞ்சா வழக்கில் இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறை
ADDED : மே 20, 2025 01:21 AM

திண்டுக்கல்: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாடிக்கொம்பு இ.பி., காலனி பகுதியில் 2022ல் 36.4 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி வைரவன் 31, நவீனா 25, திண்டுக்கல் அங்காள ஈஸ்வரி கோயில் தெரு முத்துக்கருப்பன் 23, சென்னை முகப்பேர் சுந்தரபாண்டி 38, தேனி ஆண்டிப்பட்டி அர்ஜூனன் 48, திண்டுக்கல் ஷேக் பரீத் 33, தேனி அல்லிநகரம் திவ்யா 31, வத்தலகுண்டு ஷேக் முகமது ரபீக் 35, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத் 30, ஆகிய 9 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர்.
இதன் வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வைரவன், முத்துக்கருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அர்ஜூனன், ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத்துக்கு தலா 12 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம், சேக் பரீத், திவ்யா, சேக் முகமது ரபீக் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.