UPDATED : நவ 07, 2026 05:08 PM
ADDED : நவ 07, 2026 05:06 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: செங்குறிச்சி குரும்பபட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியினர் பல கட்டமாக போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக அந்த டாஸ்மாக் கடை சீல் வைக்கப்பட்டு, இனி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் செல்வக்குமார், ஆண்டிச்சாமி, ஆண்டி, பூமிம், மகுடீஸ்வரன், அழகுராஜா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிந்து வடமதுரை எஸ்.ஐ., விஜயலிங்கன் விசாரிக்கிறார்.
