ADDED : நவ 10, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு : சேலத்தில் இருந்து மதுரை நோக்கி 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் வந்தது. நேற்று மாலை கொடைரோடு டோல்கேட் அருகே வந்தபோது பஸ்சின் அடிப்பகுதியில்இருந்து புகை வந்ததால் பஸ் நிறுத்தப்பட்டது.
அதில் பயணம் செய்த பயணிகள் மாற்று பஸ் வரும் வரை டோல்கேட் அருகே சாலையில் காத்திருந்தனர்.