/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொசுக்கள் கேந்திரமாக மாறும் அரசு மருத்துவமனை
/
கொசுக்கள் கேந்திரமாக மாறும் அரசு மருத்துவமனை
ADDED : செப் 23, 2024 05:11 AM

தாழ்வான மின் பெட்டி
பழநி காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோட்டில் மின்கம்பத்தில் உள்ள மீட்டர் பெட்டி சேதமடைந்தது தாழ்வாக திறந்த வெளியில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. இதை சரி நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்தி, பழநி.
நாய்களால் தொல்லை
திண்டுக்கல் கூட்டுறவு நகரில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆங்காங்கே நாய்கள் உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திரசேகர், திண்டுக்கல்.
..................-------மரக்கிளையால் விபத்து அபாயம்
கொடைக்கானல் பூம்பாறை ரோட்டில் முறிந்துள்ள மரத்தை முழுமையாக அகற்றாதால் சுற்றுலா பயணிகள் வாகனம் மற்றும் அன்றாட போக்குவரத்து வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதன் இடையூறுகளை அகற்ற வேண்டும். கண்ணன், பூம்பாறை.
........-------
பள்ளமான ரோடு
புதுகொம்பேறிபட்டியில் இருந்து போடிமான்கரடு அடிவார பகுதி களத்து வீடுகளுக்கு செல்லும் ரோட்டில் இருக்கும் பாலத்தையொட்டிய பகுதியில் மண் இறுக்கம் ஏற்பட்டு தார் ரோடு பள்ளமாகி உள்ளதால் டூவீலர்கள் தடுமாறும் நிலை உள்ளது. பாண்டியராஜ், வடமதுரை.
............
-------சேதம் அடைந்த வடிகால்
ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டின் இடது பகுதியில் உள்ள மழை நீர் வடிகால்வாய் சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தசாமி, ஒட்டன்சத்திரம்.
..............-------குப்பையால் சுகாதாரக்கேடு
திண்டுக்கல் பூ மார்க்கெட் நுழைவு பகுதியில் குப்பை மலை போல் குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பல்வேறு பகுதி மக்கள் வந்து செல்லும் இடமாக இருப்பதால் குப்பையை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி, திண்டுக்கல்.
.............-------கழிவுநீர் கசிவால் தொற்று
நத்தம் அரசு மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவு பகுதியில் கழிவுநீர் கசிவு ஏற்பட்டு சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் மருத்துவமனையில் கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நீர்க்கசிவு பகுதிகளை சீரமைக்க வேண்டும். வீரமணி, வேலம்பட்டி.
..............