/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விளைநிலங்களுக்கு புகும் வனவிலங்குகள் அவசியமாகிறது தொங்கும் சோலார் வேலி
/
விளைநிலங்களுக்கு புகும் வனவிலங்குகள் அவசியமாகிறது தொங்கும் சோலார் வேலி
விளைநிலங்களுக்கு புகும் வனவிலங்குகள் அவசியமாகிறது தொங்கும் சோலார் வேலி
விளைநிலங்களுக்கு புகும் வனவிலங்குகள் அவசியமாகிறது தொங்கும் சோலார் வேலி
ADDED : நவ 09, 2024 04:35 AM

பழநி : பழநி வனச்சரக பகுதிக்கு அருகே உள்ள விளைநிலங்களுக்கு வனவிலங்குகளை செல்வதை தடுக்க தொங்கும் சோலார் வேலிகளை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி பல ஆயிரம் ஏக்கரில் உள்ளது. யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, காட்டு பன்றிகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதிக்கு அருகே விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மக்காச்சோளம், தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
கோம்பைப்பட்டி,சட்டப் பாறை, பொன்னிமலை சித்தர் கரடு, வரதமாநதி அணை, பொருந்தல், குதிரையாறு அணைப்பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி, காட்டுமாடு போன்ற விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதம் செய்கிறது.
சில நேரங்களில் விவசாயிகளை தாக்கி காயமும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.தென்னை, வாழை ,கரும்பு,காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வதால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர், விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இடங்களை கண்டறிந்து தொங்கும் சோலார் வேலிகளை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோம்பைபட்டி விவசாயி துரைசாமி கூறியதாவது: கோம்பைப்பட்டி பகுதியில் அடிக்கடி யானை, காட்டு மாடுகளால் விளைபொருட்கள் சேதம் அடைவதுடன் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை வனத்துறைக்கு தெரிவித்துள்ளோம்.
பயிர் இழப்பீடு குறித்து துரிதமான நடவடிக்கை எதுவும் இல்லை. ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் அமைக்கப்பட்டது போல் பழநி வனச்சரகப் பகுதியிலும் விளைநிலங்களுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் தொங்கும் சோலார் வேலிகளை அமைக்க வேண்டும்.
இதனால் யானைகள், காட்டு மாடு காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளால் விளை பயிர்கள் தமடைவது பெருமளவில் தடுக்கப்படும் என்றார்