/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏழைகளுக்கு கனவு இல்லம் திட்டம் மூலம் சாத்தியமாகும் வீடு ; அமைச்சர் சக்கரபாணி

ADDED : நவ 02, 2024 06:20 AM

ஒட்டன்சத்திரம்: ஏழை எளிய மக்களின் சொந்த வீடு கனவு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் சாத்தியமாகி உள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரத்தில் நடந்த விழாவில் 310 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 26.81 கோடி மதிப்பிலான கடன் உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 506 பயனாளிகளுக்கு ரூ.25.30 கோடி மதிப்பீட்டிலான அடையாள அட்டைகளை வழங்கிய அவர் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்ட ஊரக பகுதிகளில் 9640, நகர் பகுதிகளில் 3964 குழு என 13,604 மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் சொந்த வீடு கனவு கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் சாத்தியமாகி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 7000 வீடுகள் கட்டப்பட உள்ளன, என்றார்.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சதீஷ் பாபு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, தாசில்தார் பழனிச்சாமி, பி.டி.ஓ.,க்கள் காமராஜர், பிரபு பாண்டியன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா கலந்து கொண்டனர்.