ADDED : பிப் 17, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி அடிவாரம் தனியார் விடுதியில் சில நாட்களாக பழநி லட்சுமிபுரத்தை சேர்ந்த காந்தி 50, துாய்மை பணிபுரிந்தார். பிப்.11ல் மதியம் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காந்தியை குத்தி கொன்றார்.
பழநி அடிவாரம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இறந்த பெண்ணிற்கும் பாலசமுத்திரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் 45 என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்தது தெரிந்தது.
இதனால் ஆனந்தகுமார் காந்தி பணிபுரித்த விடுதிக்குச் சென்று அவரை கொலை செய்தார்.
போலீசார் அவரை தேடியநிலையில் பாலசமுத்திரம் ரோட்டில் சென்ற ஆனந்தகுமார், தவறி விழுந்து காலில் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து காலில் கட்டு போடப்பட்டது. ஆனந்தகுமாரை, அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.