/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி சட்ட பாறையில் ஒற்றை யானை; விவசாயிகள் அச்சம்
/
பழநி சட்ட பாறையில் ஒற்றை யானை; விவசாயிகள் அச்சம்
ADDED : நவ 02, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி : பழநி சட்ட பாறை பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் விவசாயிகள், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
பழநி சட்டப் பாறை பகுதியில் நேற்று ஒற்றை யானை நடமாட்டம் இருந்தது. நேரில் கண்ட விவசாயிகள் , பொதுமக்கள் அச்சமடைந்தனர். இப்பகுதியில் அடிக்கடி யானை,வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் விளைநிலங்களில் உள்ள விளை பொருட்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து யானையை வனத்திற்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.