ADDED : ஆக 14, 2026 08:02 PM
சின்னாளபட்டி, ஆக.15-
ஆடி மாத 5ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கல் நடந்தது. மேட்டுப்பட்டி, நடூர், தென்புதுார், கீழக்கோட்டை, ஜனதா காலனி, செக்கடி தெரு, சமயபுரம் மாரியம்மன், வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில், பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில், கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயில், சவுடம்மன் கோயில், விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மன் கோயில், சாலைப்புதுார் காளியம்மன் கோயில், காளாஞ்சிபட்டி காளாஞ்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பழநி: ஆயக்குடி அருகே மஞ்சநாயக்கன்பட்டி உச்சி காளியம்மன் கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது. ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், கச்சேரி வீதி கூனக்காளி அம்மன் கோயில், புது தாராபுரம் ரோடு ரெணகாளியம்மன் கோயில், நெய்க்காரப்பட்டி வேலுார் மண்டு காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வடமதுரை: வடமதுரை மீனாட்சியம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன், மோர்பட்டி பத்திரகாளியம்மன், அய்யலுார் மண்டபத்தோட்டம் சக்திமுத்து மாரியம்மன், தென்னம்பட்டி சவுடம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனர்.
