/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்
/
திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்
திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்
திறந்த நிலை மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம்
ADDED : பிப் 12, 2025 03:58 AM

எரியாத சிக்னல் விளக்குகள் : திண்டுக்கல் -பழநி ரோட்டில் சிக்னல் விளக்குகள் சரிவர எரியாததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். விபத்துக்களும் நடக்கின்றன. விளக்குகளை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--மணிமாறன்,திண்டுக்கல்.
வீணாகும் குப்பை தொட்டி : நத்தம் அருகே புதுப்பட்டியில் பயன்படுத்தப்படாமல் குப்பை சேகரிப்பு தொட்டி துருப்பிடித்து வீணாகிறது. இதனால் குப்பையை பொதுமக்கள் தெருக்களில் கொட்டுவதால் சுகாதாரப் பிரச்னை ஏற்படுகிறது. முறையாக பராமரிக்க வேண்டும்.
-முருகன், புதுப்பட்டி.
சாக்கடையில் தேங்கும் கழிவுநீர் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி ஊராட்சி தெத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் எதிரே வடிகால் வசதியின்றி கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
-எம்.ஜோதிமுருகன், தெத்துப்பட்டி.
திறந்த நிலையில் மீட்டர் பெட்டி : திண்டுக்கல் குடைப்பாறை பட்டி பள்ளப்பட்டி ரோட்டில் திறந்த நிலையில் உள்ள மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது .மீட்டர் பெட்டி தாழ்வாக தொடும் துாரத்தில் உள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதை புதுப்பிக்க வேண்டும்.
-மனோஜ், திண்டுக்கல்.
சாக்கடையில் தேங்கும் கழிவுநீர் : திண்டுக்கல் பூ மார்க்கெட் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது .பூக்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வந்து செல்வதால் இதை துார்வார வேண்டும்.
-வினோத்குமார் திண்டுக்கல்.
குப்பையால் சுகாதாரக்கேடு : பழநி இடுபன்குளம் அருகே பக்தர்கள் நீராடும் பகுதியில் குப்பை குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பக்தர் முகம் சுளிக்கின்றனர். குப்பையை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கராஜ், பழநி.
மண்டியுள்ள மர இலைகள் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் நீர் வடிகால் பகுதியில் மர இலைகள் மண்டியுள்ளது. மழை நேரங்களில் நீர் செல்ல முடியாமல் தேங்குகிறது . கால்வாயில் அடைத்திருக்கும் இலைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம்முன் வர வேண்டும்.
-செந்தில்குமார், திண்டுக்கல்.

