sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடை மறைத்துள்ள பிளக்ஸ்களால் விபத்துக்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 4 வது வார்டில் திணறும் மக்கள்

/

ரோடை மறைத்துள்ள பிளக்ஸ்களால் விபத்துக்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 4 வது வார்டில் திணறும் மக்கள்

ரோடை மறைத்துள்ள பிளக்ஸ்களால் விபத்துக்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 4 வது வார்டில் திணறும் மக்கள்

ரோடை மறைத்துள்ள பிளக்ஸ்களால் விபத்துக்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 4 வது வார்டில் திணறும் மக்கள்


ADDED : டிச 22, 2024 07:04 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ரோடை மறைத்து வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிகள் சிரமம், செடி கொடிகள் முளைத்த துார்வாரப்படாத ஓடை என ஒட்டன்சத்திரம் நகராட்சி நான்காவது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம் உள்ளன.

மார்க்கெட் பைபாஸ் ரோடு, தாராபுரம் ரோடு கிழக்கு மேற்கு, பழநி- திண்டுக்கல் ரோடு , வ.உ.சி.நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லலை. போதுமான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டுக்கென தனியாக பகுதி நேர ரேஷன் கடை பிரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தாராபுரம் ரோடு,மார்க்கெட் பைபாஸ் ரோடுகளில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் அமைக்க சேதப்படுத்தப்பட்ட தெரு ரோடுகளில் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.

தாராபுரம் ரோடும் மார்க்கெட் பைபாஸ் ரோடும் சந்திக்கும் பகுதியில் பல்வேறு கட்சிகள் நிறுவனங்களின் பிளக்ஸ்கள் வைக்கப்படுவதால் பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டில் திரும்புவதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. விபத்தும் ஏற்படுகிறது . மார்க்கெட் பைபாஸ் ரோடு வடக்கு பகுதியில் சின்ன குளத்திற்கு செல்லும் கழிவுநீர் ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. இதுபோல் சின்னகுளம் நிரம்பி மறுகால் செல்லும் பகுதியில் உள்ள ஓடை துார்வாரப்படாமல் செடி கொடிகள் முளைத்துள்ளது. தாராபுரம் ரோடு தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வரை பஸ்கள் நடுரோட்டிலே நிறுத்தப்படுகிறது. மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்த பகுதியில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இங்குள்ள பஸ் ஸ்டாப்பை சற்று தள்ளி மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய அலுவலகம் பின்புறம் இன்னும் சில பகுதிகளில் தெருரோடுகள் அமைக்க வேண்டும்.

சின்ன குளத்தின் மேற்குப் பகுதியில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் உருவாகும் புகையால் தாராபுரம் ரோடு பகுதி குடியிருப்பு வாசிகள் சுவாசக் கோளாறால் சிரமப்படுகின்றனர்.

தற்போது பெய்த மழையால் வார்டுக்குள் உள்ள சாக்கடைகளை புல் பூண்டுகள் மூடி உள்ளது. இவற்றை அகற்றி சாக்கடையை முழுவதுமாக துார்வார வேண்டும். தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

வ.உ.சி நகர் பகுதியில் இருந்து ஏ.பி.பி நகர் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.

தேவை ரவுண்டானா


டி. குமார் தாஸ், பா.ஜ., நகர பொதுச்செயலாளர் ஒட்டன்சத்திரம்: தாராபுரம் ரோடு மார்க்கெட் பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

வார்டு வழியாக சின்ன குளம் செல்லும் ஓடையை தூர்வார வேண்டும். தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.

இதேபோல் மார்க்கெட் பைபாஸ் ரோட்டிலும் ஆக்கிரமிப்பு காரணமாக நெரிசல் குறைந்த பாடில்லை. மழைகாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் வாய்க்கால் பெரிதாக அமைக்க வேண்டும். தாராபுரம் பழநி ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

தேவையான அளவிற்கு குடிநீர்


எஸ்.கோபி, திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் பொருளாளர்: வார்டுக்குள் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை. பல இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. சாக்கடைகள் துார்வாரப்படுகிறது.

கோரிக்கைகள் நிறைவேற்றம்


அழகேஸ்வரி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வார்டில் தனி ரேஷன் கடை செயல்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

விரைவில் இதற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வ.உ.சி .நகர் பகுதியில் சேதம் அடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்படும்.

வார்டுக்குள் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும்.

புல் பூண்டுகளை அகற்றி சாக்கடைகள் துார்வாரப்பட்டு வருகிறது. பல தெருக்களில் புதிதாக பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. சின்னக்குளம் மறுகால் செல்லும் வாய்க்காலை துார் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us