ADDED : அக் 11, 2024 07:31 AM

திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) 2012 முதல் திண்டுக்கல்லில் செயல்பட்டு வருகிறது. பிரிகேஜி முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ ., பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடந்து வருகிறது.
மாணவர்களுக்கு கல்வியறிவு மட்டுமின்றி எக்ஸ்ட்ரா கலைத்திட்டத்தின்படி மேற்கத்திய நடனம், ஸ்கேட்டிங், கராத்தே, சிலம்பம், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தரப்படுகிறது.
மாணவர்களுக்கு தலைமைப்பண்பு, நல்லொழுக்கம், தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. மாதந்தோறும் அனைத்துவகையான விழாக்கள் மாணவர்களைக் கொண்டே நடத்துகிறோம். இதனால் அவர்களுக்கு குழுப்பண்பு கற்றுத்தரப்படுகிறது.
மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை கலர் டே நடத்தப்படுகிறது. இது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பத்து , பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற எங்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றனர்.
ஐ.ஐ.டி., நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் தரப்படுகிறது. இதன் மூலம் தேர்வு பெற்ற மாணவர்கள் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் பொறியியல்,மருத்துவக்கல்லூரியில் பயில்கின்றனர்.
- எம்.பி.மங்களராம் காயத்ரி மங்களராம் செயலாளர்கள், அச்யுதா பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) திண்டுக்கல்