/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
த.வெ.க., தலைவர் விஜய் என நினைத்து அமைச்சர் காரை மறித்த தொண்டர்கள்
/
த.வெ.க., தலைவர் விஜய் என நினைத்து அமைச்சர் காரை மறித்த தொண்டர்கள்
த.வெ.க., தலைவர் விஜய் என நினைத்து அமைச்சர் காரை மறித்த தொண்டர்கள்
த.வெ.க., தலைவர் விஜய் என நினைத்து அமைச்சர் காரை மறித்த தொண்டர்கள்
ADDED : மே 02, 2025 02:04 AM

வத்தலக்குண்டு:த.வெ.க., தலைவர் விஜய் என நினைத்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி காரை மறித்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
த.வெ.க., தலைவர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நேற்று மாலை மதுரை விமான நிலையத்திலிருந்து தாண்டிக்குடி சென்றார். த.வெ.க., தொண்டர்கள் வத்தலக்குண்டு - திண்டுக்கல் ரோடு -பிரிவில் விஜய் வருகையை எதிர்பார்த்து நீண்ட நேரம் காத்திருந்தனர். அந்தநேரத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பாதுகாப்பு வாகனத்துடன் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டுக்கு வந்தார். விஜய் கார் வருகிறது என தொண்டர்கள் ஆர்ப்பரித்து ரோட்டை மறித்தனர். இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருப்பதை கவனித்த அமைச்சர் பெரியசாமி கார் கண்ணாடியை மெதுவாக கீழே இறக்கியதும், த.வெ.க., தொண்டர்கள் ஏமாற்றமடைந்து வழிவிட்டனர். மேலும் வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி போலீசார் எந்த வழியாக விஜய் வருகிறார் என்பதை அறிய முடியாமல் தவித்தனர். விஜய் செம்பட்டியிலிருந்து சித்தையன்கோட்டை, சித்தரேவு வழியாக தாண்டிக்குடி சென்றதால் நிம்மதி அடைந்தனர்.
தாண்டிக்குடியில் விஜய்
சித்தரேவு தாண்டிக்குடி மலை ரோடு வழியாக மங்களம்கொம்பில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்றிரவு 7:00 மணிக்கு விஜய் வந்தார். கோயம்புத்தூரில் நடந்த நிகழ்வையடுத்து இங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகப்படுத்தபட்டிருந்தது. இருந்த போதும் காரை விட்டு வெளியே வராத விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைத்தபடி சென்றார். மூன்று நாட்களுக்கு மேல் தாண்டிக்குடி கன்னிமாதுறை பகுதியில் ஜனநாயகன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதில் விஜய் பங்கேற்கிறார். அவரது வருகையால் மலை ரோட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.