ADDED : ஜூன் 18, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை , தனியார் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தியது.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் கண்ணதேவன், செயற்பொறியாளர் சவுந்தரராஜன், வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், தோட்டக்கலை துணை இயக்குநர் காயத்ரி, வணிக துணை இயக்குநர் உமா, உதவியாளர் நாகேந்திரன் கலந்து கொண்டனர்.