ADDED : டிச 06, 2025 05:06 AM
திண்டுக்கல்: இந்திய அரசின் அறிவியல் ,தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியுடன் தமிழக வேளாண்மைப் பல்கலை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சிமையத்தின் கீழ் உள்ள காலநிலை , பேரிடர் வேளாண் மகத்துவமையம் , திண்டுக்கல் வாகரை, மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் இணைந்து காலநிலை 'மாற்றத்தை தாங்கவல்ல வேளாண் தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில் ஒருநாள் வேளாண் பயிற்சி நடத்தினர்.
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வானிலை மாறுபாடுகள், அதனை நிர்வகிக்க துல்லியமான பண்ணை முடிவுகளை எடுத்தல் குறித்து விளக்கினார்.
மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் செல்வகுமார் காலநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.மையத்தின் இணை ஆராய்ச்சியாளரான செந்தில்ராஜா மையத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள், மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி முயற்சிகள் குறித்து விளக்கினார். இணை ஆராய்ச்சியாளரான தசரதன், செந்தில்ராஜா ரமேஷ் பேசினர். 12 வட்டாரங்களைச் சேர்ந்த 50 விவசாயிகளுக்கு விதை , வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

