ADDED : டிச 06, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: உலக கலைகள் , விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட சிலம்ப பட்டய திறனாய்வு தேர்வில் தருமத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப்பள்ளி மாணவர்கள் 19 பேர் பங்கேற்ற நிலையில் பரிசுக்கோப்பை, சான்றிதழ்களை வென்றனர். இதற்கான பாராட்டு விழா பள்ளியில் தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தார். வென்ற மாணவர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதற்கு காரணமான ஆசிரியர்கள் பாப்பாத்தி பத்மா, சுதிமேரி, தேன்மொழி, ஜெயந்தி, சிவபானுப்ரியா, இந்திரா தேவி உள்ளிட்டோர் பாராட்டு பெற்றனர்.

