ADDED : டிச 06, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இரு தினங்களாக வெயில் அடித்த நிலையில் நேற்று மீண்டும் மழை பெய்தது.
திண்டுக்கல்லில் சில நாட்களாக தொடர் மழை பெய்ய பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இரு தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயில் அடித்தது.
இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கருமேகங்கள் சூழ மாலை 6:00 மணிக்கு லேசான துாரலுடன் பெய்யத் தொடங்கி கன மழையாக கொட்டியது.
இதனால் பணிக்கு சென்றோர் வீடு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். திருச்சி ரோடு, நேருஜி ரவுண்டானா, ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதி ரோடுகளில் மழைநீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.

