/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க.,வில் பூத் வாரியாக குழு
/
அ.தி.மு.க.,வில் பூத் வாரியாக குழு
ADDED : டிச 27, 2024 05:25 AM
செம்பட்டி: அ.தி.மு.க.,வில் பூத் வாரியாக 9 பேர் கொண்ட நிர்வாகிகள் குழுவை அமைக்க ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முக்கிய கட்சிகள் ஆயத்தமாகுகின்றன. அ.தி.மு.க.,வில் ஐ.டி., பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கடை நிலை வரை மாற்றங்களை ஏற்படுத்த தலைமை அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. முன்னதாக தேர்தல் பணிகளை கவனிப்பது துவங்கி, ஓட்டு எண்ணிக்கை முடிவு வரும் வரையிலான நடவடிக்கை கிளை வாரியாக நிர்வாகிகள் கொண்ட தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டு பணிகள் கண்காணிப்பு நடந்தது.
மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகள் மும்முரம் அடைந்தது. இதற்காக பூத் வாரியாக 9 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழுவை நியமிக்கப்படுகிறது. உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பதன் மூலம் ஒவ்வொரு பூத் வாரியாக 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்படும்.
செயலாளர், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. அதிருப்தியால் ஓட்டுகளை சேகரிப்பதில் போதிய கவனம் செலுத்த முடியாத பிரச்னை இருந்தது. இதனை கையாளும் வகையில் பூத் வாரியாக தனித்தனியே குழு(கிளை) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

