/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க வேண்டும்; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு
/
முதல் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க வேண்டும்; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு
முதல் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க வேண்டும்; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு
முதல் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க வேண்டும்; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு
ADDED : நவ 23, 2024 05:49 AM
திண்டுக்கல்; ''முதல் தலைமுறை வாக்காளர்களை அதிக அளவில் ஈர்க்க வேண்டும்,''என முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்த நேரடி கள ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: கட்சிக்கு இளைஞர்கள் தேவை. அதேபோன்று மகளிரையும் அதிகளவில் சேர்க்க வேண்டும். கட்சி ஆலமரம் போல் வளர்ந்திருக்கிறது. இதற்கு ஆணிவேர் மட்டும் போதாது. மரத்தில் பழுத்த இலை,பச்சை இலை,கொழுந்து இலை இருக்க வேண்டும். அப்பொதுதான் பூத்து காய் காய்க்கும். முதல் தலைமுறை வாக்காளர்களை அதிக அளவில் ஈர்க்க வேண்டும். நாம் பலசாலிகள். தொய்வாக இருந்தால் நமது எண்ணம் நிறைவேறாது.
மக்களிடம் மிகுந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி அகல வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொந்தளிப்பில் உள்ளனர். அவர்களை நமது நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்க தி.மு.க., கூட்டணி கட்சிகள் நம்முடன் வந்து விடுவார்கள் என்றார்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தலைமை அறிவிக்கக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம் போன்றவற்றில் தவறாது பங்கேற்று கட்சிப் பணியை சிறப்பாக செய்யவேண்டும்.
2026ல் ஆட்சியைப் பிடித்து பொது செயலாளர் பழனிசாமியை முதல்வராக வேண்டும் என்பதே நமது இலக்கு. உறுப்பினர் சீட்டு அனைவருக்கும் சென்றடைய வேண்டும். வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்ய விடாமல் தடுக்க வேண்டும். என்றார்.
மாவட்ட இணைச் செயலாளர்தேன்மொழி எம்.எல்.ஏ.,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன்,மாவட்ட பொருளாளர் வேணுகோபாலு,மாநில இளைஞரணி ரவிமனோகரன்,மாவட்ட துணை செயலாளர் விஜயபாலமுருகன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜ்மோகன்,ஒன்றிய செயலாளர் ராமராஜ், தொழிற்சங்க செயலாளர் முத்தையா, இளைஞரணி செயலாளர் அன்வர்தீன் ,பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாணவரணி செயலாளர் கோபி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார்,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ஒன்றிய செயலாளர்கள் முருகன்,யாகப்பன், மயில்சாமி, சுப்பிரமணி, சின்று மாரியப்பன், நகர செயலாளர்கள் ஸ்ரீதர்.முருகானந்தம், பேரூர் செயலாளர்கள் பீர்முகமது, சக்திவேல்,முத்தையா மாணவரணி இணைசெயலாளர் அழகுமணிகண்டன் பங்கேற்றனர்.